Wednesday, September 1, 2021

பிறவி அறுத்திடவே

ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி

பிறவியறுக்க பிறவி எடுத்தேன்
பிறவியறுக்க அறியாமல் தவித்தேன்

பித்து பிடித்ததுபோல் படித்தேன்
வித்தை அறிந்திட துடிதுடித்தேன்

எழுபிறப்பின் பிடியினால் தவித்தேன்
விழுமிய வாழ்வு தேடி நொடிந்தேன்

சித்தர் வழி அறிந்து மகிழ்ந்தேன்
பித்தம் களைவதறிந்து நெகிழ்ந்தேன்

சித்தம் முழுதும் சிவனென தொழுதேன்
சித்தர்பலர் ஆசி வேண்டி அழுதேன்

சிவனும் கடைக்கண்ணால் அருளிணான்
சித்தர்களும் பரிவெனக்கு காட்டினர்

சிவனின் அன்பாலும் சித்தர்பலர்
தவத்தின் பயனாலும்  ஆட்கொள்ளப்பட்டேன்

அகத்தியர் எம்அகம் புகுந்தார்
அகத்தை தெளிவித்து அருளினார்

அடுத்தது அடுத்ததென  அறிவித்தார்
எடுத்தது எதிலும் தெளிவைதந்தார்

பிறவிப்பயனை உணரவைத்த உத்தமர்க்கு
பிறவியெடுத்து தொண்டுசெய்வேன்

ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். 

*மனமது செம்மையானால்* YouTube சேனலில்  இன்று வெளியாகி இருக்கின்ற "பிறவி அறுத்திடவே "காணொளியை  காண  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி*மனமது செம்மையானால்*YouTube Channel சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.Bell. Buttonn அமுக்கி  alll ஐ   தேர்ந்தெடுக்கவும். உடனடியாக உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்.

YouTube Link:

 https://youtu.be/BrpCRvOkNmg

No comments:

Post a Comment