ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி
அன்பர்களுக்கு வணக்கம்.
26.01.2006 அன்று
என் வாழ்வில் திருப்பம் ஏற்பட்ட நாள்
அகத்தியர் என்னை ஆட்கொண்ட நாள்
வாழ்வை தெளிவாக்கிட எத்தனித்த நாள்
உயிர் உள்ள வரை மறக்க முடியாத நாள்
அன்று முதல் என் வாழ்வு அவராலேய நடத்தப்படுகிறது. தாயாய் தந்தையாய் குருவாய் தெய்வமாய் இருந்து என்னை காத்துவருகிறார். எத்தனை பிறவியெடுத்தாலும் அவருக்கு கைமாறு செய்த அடைக்கமுடியாத அளவிற்கு என்னை, என் பெற்றோர்களை, என் மனைவியை,என் குழந்தைகளை காத்துவருகிறார்
வாலறிவன் நற்றாள் என்பது எம்ஐயனின் திருவடிகள் என்பதை உணர்ந்து, அவரின் திருவடிகளை பற்றிக்கொண்டேன்.அவரும் என்னை ஏற்றுக்கொண்டார்.என் நிலையை எனக்கு உணர்த்தி, படிப்படியாக என்னை மேம்படுத்தி வருகிறார்.
வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ நிகழ்வுகள் என் வாழ்வில் நிகழ்ந்த்துள்ளன.
நாடி ஜோதிடத்தில் ஆசி காண்டம் என்று ஒரு காண்டம் உள்ளது.கிட்டத்தட்ட ஜீவநாடி போன்றது.
19.01.17 அன்று எனக்கு அருளிய ஆசியில்
கண்டிப்பாய் உன் வேண்டுதலும் ...........
......... ......... .............
இருண்டிடுமே கருமேகம் மழைபொழிந்து
கண்டிட்ட புல் செடிகள் பூமி குளிர்ந்து
குளிர்ச்சிபல பலமனிதர்கள் நீர்நீந்தி
என அருளியிருந்தார். அதன்பின் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
இதனை உறுதிபடுத்த இன்று ஆசி கேட்டேன்.
அதில்
ஆசிவழி வருணனை வேண்டிநான்
அடியோனே முன்ஆசி கூறியிருந்தேன்
மாசில்லா அதன்வழி கருமேகம்
மழைபொழிந்து ......... ........
........... என் வாக்கை பலரிடமும்
புகழ்ந்துநீ புண்ணியமேற்க ஆசியுண்டு.
என்று அருளினார்.
ஐயனின் அன்பை அருளை என்னென்று சொல்வேன்.
ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியரே போற்றி